1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா? நாளை வெறும் 99 ரூபாயில் திரையரங்கில் படத்தை பார்க்கலாம்..!

1

இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தேசிய சினிமா தினம் கடைப்பிடிக்கப்படும்... தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு நாளை செப்டம்பர் 20 திரையரங்கு டிக்கெட் கட்டணம் ரூ.99 தான் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐநாக்ஸ்.

திரையரங்குகளுக்குப் பார்வையாளர்களை அதிகம் இழுக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு,4டிஎக்ஸ், ஐமேக்ஸ் திரையரங்கங்களுக்குப் பொருந்தாது.

இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தேசிய சினிமா தினம் கடைப்பிடிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) அறிவித்துள்ளது . தேசிய சினிமா தினம், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்பட ஆர்வலர்கள் வெறும் 99 ரூபாய்க்கு திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. பங்கேற்கும் சினிமா சங்கிலிகளில் PVR INOX , Cinepolis Miraj, Movie Time மற்றும் Delite ஆகியவை அடங்கும். விழாவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.



 

 

Trending News

Latest News

You May Like