மக்களே ரெடியா ? இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்..!

பழமையான நாடுகளில், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஒரு நாட்டின் பண்டைய கலை, கலாசாரம், வாழ்வியல், நாகரிகம் உள்ளிட்ட மரபுகளை, அடுத்தடுத்த தலைமுறைக்கு அவை உணர்த்துகின்றன.வருங்கால தலைமுறையினருக்கு, அவற்றின் சிறப்பை உணர்த்தவும், பாதுகாக்கவும் கருதி, உலக நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன....
அதற்காக, சர்வதேச நாடுகளில், உலக பாரம்பரிய நாளாக, ஏப்., 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,நவ., 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பாரம்பரிய வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது
இந்நிலையில் இன்று 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, உலக பாரம்பரிய வாரமாக அறிவித்து அந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்து கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகளை நடத்தி ஆண்டுதோறும் தொல்லியல்துறை விழாவாக நடத்தி வருகிறது.
மாமல்லபுரத்தில் பாரம்பரிய வாரம் துவக்க நாளான இன்று ஒருநாள் மட்டும், அனைத்து சுற்றுலா பயணிகளும் அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.