1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா ? இன்று காலை 9:30 மணிக்கு சிஎஸ்கே முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்..!

1

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று (18-ம் தேதி) காலை 9.30 மணிக்கு paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1,700 எனவும் அதிக பட்ச விலை ரூ.7,500 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியதாவது :

“டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒரு நபரால் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியை மைதானத்தின் கேலரியில், சி, டி, இ ஆகிய கேலரிகளின் லோயர் பகுதியில் இருந்து காண ரூபாய் 1700 கட்டணம்,  சி, டி, இ ஆகிய கேலரிகளின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூபாய் 4 ஆயிரம் கட்டணம், ஐ, ஜே, கே கேலரிகளின் கீழ் பகுதியில் இருந்து போட்டியைக் காண விரும்புபவர்களுக்கு ரூ.4500 கட்டணம்,  கேலரியின் மேற்பகுதியில் இருந்து போட்டியைக் காண ரூ.4000 கட்டணம், மேலும் கலைஞர் கருணாநிதி கேலரியில் இருந்து போட்டியைக் காண ரூ.7,500 கட்டணமாக நிர்ணயம். மேலும் போட்டி நாளன்று மாலை 4.30 மணிக்கு பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். செல்லப்பிராணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

Trending News

Latest News

You May Like