1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா ? மாதம் 1.75 லட்சம் சம்பளம்..ஜப்பான் வேலைக்கு தமிழக அரசு அளிக்கும் பயிற்சி..!

1

ஜப்பானில் திறன்பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. சுமார் 18 லட்சம் திறன்மிகு பணியாளர் தேவைப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றனர். அதிலும் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. மேலும் இங்கு அளிக்கப்படும் சம்பளமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வழங்கப்படும் சம்பளத்தை விட சுமார் 3 முதல் 6 மடங்கு இங்கு சம்பளம் அதிகமாக தரப்படுகிறது.

இன்ஜினியர்களுக்கு N2 நிலை படி வருடத்திற்கு சுமார் 21 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதே போன்று இன்ஜினியரிங் அல்லாத பணிகளுக்கு N4 நிலை படி, வருடத்திற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ஜப்பானில் எலெக்ட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ், செமிகன்டக்கர், மெக்கானிக்கல்,ஏஐ, எம்எல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், விருந்தோம்பல், நர்சிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்த துறை சார்ந்த படிப்புகளில் தகுதியுடையவர்கள் இந்த வேலைவாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

இந்த வாய்ப்பை தமிழர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ் மொழி வழியில் ஜப்பானிய மொழியை தமிழக அரசு இலவசமாக கறிப்பிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

தமிழக அரசு அளிக்கும் இலவச ஜப்பானிய மொழி வகுப்பிற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு கழகம் மற்றும் Techno Smile India இணைந்து இந்த வகுப்பை நடத்தவுள்ளனர்.

இப்பயிற்சிக்கு வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் பயிற்சி தொடங்குகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் விதம் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வகுப்பு நடைபெறும். இவை நேரடி வகுப்புகள் மட்டுமே, ஆன்லைன் வழியாக கற்பிக்கப்படாது. முழுமையாக 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform என்ற கூகுள் படிவத்தில் தகவல்களை உள்ளிட்ட விண்ணப்பிக்க வேண்டும். மேலும் https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற நான் முதல்வன் இணையத்தளத்தில் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like