1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா ? நாளை தியேட்டரில் படம் பார்க்க வெறும் ₹99தான்..!

1

குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றாலே டிக்கெட்டிற்கு மட்டும் குறைந்தது ரூ. 1000 செலவாகிவிடும். இதை தவிர மற்ற பல செலவுகளும் இருக்கும். இதனால் பெரும்பாலும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது என்பது தற்போது மிகவும் யோசனைக்குரியதாக மாறிவிட்டது. இதனால் முக்கிய திரைப்படங்களை தவிர பிற நாள்களில் கூட்டம் அந்தளவிற்கு இருக்காது.

அதிலும் கொரோனா காலக்கட்டத்தில், திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டதன் விளைவாக பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை அனைத்தும் சமாளிக்கும் விதமாகவும், திரையரங்குகளுக்கு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இந்தாண்டு அக்டோபர் 13 ஆம் தேதி தேசிய சினிமா தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) தெரிவித்துள்ளது.

அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் சினிமா ரசிகர்களைத் தியேட்டருக்கு வரவழைக்கும் நோக்கத்தில், டிக்கெட் விலை ரூ. 99 மட்டும் வசூலிக்கப்படும் என தனது செய்திக்குறிப்பில் தேசிய மல்டிபிளக்ஸ் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக PVR, INOX, Cinepolis, Miraj மற்றும் Delite உள்பட இந்தியாவில் உள்ள சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் தேசிய சினிமா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றுள்ளன.

Trending News

Latest News

You May Like