மக்களே ரெடியா ? இந்த ஆம்லெட் சாப்பிட்டா 1 லட்சம் தருவாங்க..!
டெல்லியில் உள்ள ஒரு உணவுக் கடையின் உரிமையாளர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார்.
அதாவது, 31 முட்டைகளை வைத்து தயாரிக்கப்படும் ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அக்கடையின் உரிமையாளர் ராஜிவ் பாய் கூறியுள்ளார்.
இந்த ஆம்லட்டில் பன்னீர், சீஸ், காய்கறி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் சேர்ந்து ரூ.1320 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.