1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா ? டிசம்பரில் டைனசோர் பூங்கா திறப்பு..!

1

தில்லியின் முனிசிபல் கார்ப்பரேஷனின் சராய் காலே கானில் உள்ள டைனோசர் தீம் பூங்காவில் உள்ள சில அம்சங்கள் டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பூங்கா "இந்தியாவின் முதல் கழிவுகளை கலைக்கும் தீம் டைனோசர் பூங்காவாக" இருக்கும் என்று கூறி, உலோக கழிவுகளால் செய்யப்பட்ட 40 டைனோசர் சிற்பங்களுக்கு கலைஞர்கள் இறுதி கட்டத்தை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 

 எட்டு கலைஞர்கள் மற்றும் 60 தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பணிபுரிகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இங்கு மொத்தம் 54 பிரம்மாண்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 முதல் 65 மீட்டர் நீளம் கொண்டவை.இங்குள்ள டைனசோர் சிலைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவது போன்ற ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம்பெறுகின்றன.

குறிப்பாக, சிறுவர்களை கவரக் கூடிய வகையில் விதவிதமான பிரமாண்ட டைனோசர்களின் சிற்பம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவை அமைக்கப்படுகின்றன. 15 வகையான டைனோசர் வகைகளின் சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 பிரமாண்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 9 முதல் 65 மீட்டர் நீளம் கொண்டவை. சிலையின் அதிகப்பட்ச அகலம் 54 மீட்டர். ‘ஜுராசிக் பார்க்’ என்ற ஆங்கில திரைப்படத்தில் வருவது போல், இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள டைனோசர் சிலைகள் பல்வேறு ஒலிகளை எழுப்புவது போன்ற ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. இது சிறுவர்களை அதிகம் கவரும். மேலும், நெருப்பை கக்குவது, வாகனங்களை அடித்து நொறுக்குவது போன்ற வடிவங்களுடனும் சிலைகள் வடிக்கப்பட்டு இருக்கின்றன ஏற்கனவே, இந்த பூங்காவின் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டன.அடுத்த மாதம் இறுதிக்குள் எஞ்சியுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு, பூங்கா திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘பூங்காவுக்கான நுழைவு கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பூங்கா திறக்கப்படும் நேரத்தில் அது முடிவு செய்யப்படும்,’ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like