1. Home
  2. தமிழ்நாடு

மக்களே ரெடியா..? வரும் 27ல் தொடங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி..!

Q

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நந்தனம் YMCA மைதானத்தில் வரும் 27ம் தேதி முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கி வைக்கின்றனர். மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like