தனுஷ் ரசிகர்களே ரெடியா ? இன்று வெளியாகிறது ராயன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!
நடிகர் தனுஷ் தற்போது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராயன் படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ‘ராயன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அடங்காத அசுரன்’ பாடல் இன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
Raayan .. Adangaadha Asuran from Tom. @sunpictures @arrahman pic.twitter.com/JL9IgKZu2e
— Dhanush (@dhanushkraja) May 8, 2024