1. Home
  2. தமிழ்நாடு

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ரெடியா?- பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு!

1

10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியானது. 10ஆம் வகுப்பை பொறுத்தவரை வரும் டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது.வரும் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்பை பொறுத்தவரை டிசம்பர் 9ஆம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. டிசம்பர் 23ஆம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிவுக்கு வருகின்றன. இந்த தேர்வுகளுக்கு முன்பாக செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கேற்ப மாணவ, மாணவிகள் தயாராகி வரும் சூழலில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சற்றுமுன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
School Education


பள்ளிக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்விற்கான செய்முறை தேர்வு வரும் டிசம்பர் 2 திங்கள் முதல் டிசம்பர் 6 வெள்ளி வரை நடத்தி முடிக்க வேண்டும்.


இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதையொட்டி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அனைத்து பள்ளிகளிலும் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like