1. Home
  2. தமிழ்நாடு

அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவையா? எளிதில் தீப்பிடிக்கின்றன என ஆய்வில் தகவல்!!!

அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவையா? எளிதில் தீப்பிடிக்கின்றன என ஆய்வில் தகவல்!!!


உலக அளவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முதல் இடத்தில் உள்ளது அமேசான். இந்நிறுவனம் இந்தியா உட்பட அமெரிக்க, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளில் 'அமேசான் பேசிக்' என்ற பெயரில் சொந்த தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது.

மைக்ரோவேவ் ஓவன், பேட்டரி, USB கேபிள், மல்டி பிளக் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அமேசான் தயாரித்து விற்பனை செய்கிறதுமேலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை அமேசான் தளத்தில் தேடும் போது, முதல் இடத்தில் அமேசானின் சொந்த தயாரிப்புகள் காட்டப்படுகின்றன.


இந்த
நிலையில் , அமேசானின் சில சொந்த தயாரிப்பு பொருட்கள் தரம் குறைந்தவையாக உள்ளதாகவும் , தீப்பிடித்து வருவதாகவும் CNN செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது . இதுதொடர்பாக CNN நிறுவனம் அமேசானின் மைக்ரோ வேவ் ஓவனை மேரிலாண்டு பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சித்துறைக்கு அனுப்பி வைத்து சோதனை செய்தது . அதில் , மைக்ரோவேவ் ஓவனின் பேனல் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது .

இதே போல் , அமேசானில் வாடிக்கையாளர் பதவிட்ட கருத்துகளை ஆராயும் போது , மொபைலில் சார்ஜ் ஏற்றுவதற்காக அமேசானின் USB கேபிளை
பயன்படுத்தும் போது மின்சக்தி தாங்காமல் எளிதில் உருகுவதாகவும் , புகை வருவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் மேலும் , அமேசானின் சொந்த தயாரிப்பில் வாங்கப்பட்ட மல்டி ஜங்ஷன் பிளக் பாயிண்ட் ஒன்று தீப்பிடித்தாகவும் செய்திகள் வந்துள்ளன
 

Trending News

Latest News

You May Like