1. Home
  2. தமிழ்நாடு

அஜித் ரசிகர்களே ரெடியா ? Good Bad Ugly படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு..!

1

அஜித்தின் 63-வது படமாக உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் திரையுலகிற்கு அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆகியதைத் தொடர்ந்து, இன்று அவர் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகிறது. 

இந்த நிலையில், Good Bad Ugly படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்து, நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “Today 5.32, GBU ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

அஜித் திரைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் அவரது விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சி படத்தின் போஸ்டர் ஒன்று ஏற்கனவே காலை வெளியாகியது. ரத்தம் வடியும் முகத்துடன் இருப்பது போல விடாமுயற்சி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், ஒரே நாளில் இரட்டை விருந்தாக குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகிறது.



 

Trending News

Latest News

You May Like