1. Home
  2. தமிழ்நாடு

+1 மாணவர்களே ரெடியா ? இன்று முதல் பொதுத்தேர்வு தொடக்கம்...8.25 லட்சம் மாணவ- மாணவிகள் தயார்!!

1

+2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆசிரியர், மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 4) பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்கள் மற்றும் சிறைவாசிகள், தனித் தேர்வர்கள் என 8,25,394 பேர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் 3,302 தேர்வு மையங்கள், 3,200 பறக்கும் படைகள், 46,700 தேர்வு கண்காணிப்பாளர் என பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. நாளை தொடங்கும் தேர்வு வருகிற 25ம் தேதி வரை நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like