1. Home
  2. தமிழ்நாடு

ஆற்காடு சுரேஷின் மனைவி சொன்ன பகீர் தகவல்!

1

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்வத்தாமன், அவரது தந்தை பிரபல தாதாவும், வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அஸ்வத்தாமன், அவரது தந்தை நாகேந்திரன் இருவரையும், காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை போலீசார் தேடி வந்த நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது தெரியவந்தது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரையும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஆற்காடு சுரேஷின் மனைவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனது கணவரை கண்டாலே எதிர் தரப்பினர் அஞ்சி நடுங்கினர். நாளடைவில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து எனது யோசனைப்படி அவர் சென்னையிலிருந்து சொந்த ஊரான ஆற்காடு பகுதியில் தங்கினார். இந்நிலையில் தான் கடந்தாண்டு அவர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றம் ஆஜராகிய அவரை எதிரிகள் வெட்டி படுகொலை செய்தனர்.

சென்று விட்டு, பின்னர் உணவருந்த மாலை நேரத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு நண்பர்களுடன் காரில் சென்றார். இதை நோட்டமிட்டு எதிரிகள் கணவரை கொலை செய்தனர். கணவர் ஆற்காடு சுரேஷ் கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டாலும் ஆம்ஸ்ட்ராங் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக எனக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் சேர்க்கப்படவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். இதையடுத்து, அவரை கொலை செய்து பழி தீர்க்க வேண்டும் என சபதம் எடுத்தேன். இதுகுறித்து கணவரின் தம்பியான பொன்னை பாலுவிடம் கூறினேன்.

இதையறிந்து முதற்கட்ட நகையை விற்று ரூ.1.5 லட்சத்தை வைத்து கொலைக்கான ஆரம்ப கட்ட வேலைகளை பார்க்க சொன்னேன். கணவர் ஆற்காடு சுரேஷ் முதலாமாண்டு நினைவு தினத்துக்கு முன்னர் தீர்த்துக் கட்ட வேண்டும் என சபதம் எடுத்து அதை நிறைவேற்றினோம் என கைதான பொற்கொடி வாக்குமூலமாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் பொன்னை பாலுவுடன் மேலும் பலர் ஒன்று சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியுள்ளது அம்பலமாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like