அரண்மனை 4 பட நடிகரின் தாயார் காலமானார்..! திரைத்துறையினர் இரங்கல்..!

நடிகர் சந்தோஷ் பிரதாப் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சார்பட்டா படத்தில் நடித்த ராமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இருப்பினும் திரையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் காமெடி ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றார்.
திரைப்படத்தை தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ். இந்த நிலையில், தற்போது இவருடைய தாயார் காலமான தகவல் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சந்தோஷ் பிரதாப்பில் தாயார் இந்திரா பாய் உடல்நல குறைவு காரணமாக, நேற்று மாலை 7:40 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல்தெரிவித்து வருகிறார்கள்