ஏஆர் ரஹ்மானின் உருக்கமான பதிவு : இதயம் நொறுங்கிவிட்டது...
பிரபல இசையமைப்பாளராகவும், ‛ஆஸ்கர்' வென்ற நாயகனாக இருந்தாலும் கூட ஏஆர் ரஹ்மான் கிசுகிசு மேட்டர்களில் சிக்கியது இல்லை.
இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு தம்பதி பிரிந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிவை அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு கதிஷா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ள நிலையில் இருவரின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அதனை காண முடியாத நிகழ்வாக மாறி உள்ளது. நொறுங்கிய இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் தாங்கும்போது கூட அது நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அதற்கான பொருத்தமான இடம் என்பது இல்லை.
இந்த மோசமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார்.
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024