1. Home
  2. தமிழ்நாடு

ஏ.ஆர்., ரஹ்மான் நலமாக உள்ளார் : முதல்வர் ஸ்டாலின்..!

Q

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு வயது 58. இவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதும் வெவ்வேறு மொழி படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகாடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (மார்ச் 16) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் பரவியது.
ஆனால் இதனை அவரது குடும்ப உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். பயணம் தொடர்பால் அவர் பெரும் களைப்பாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
இது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், டாக்டர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like