1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்- காரணம் இதுதான்..!!

1
ஆஸ்கார் விருது வென்று உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், இந்தியளவில் பிரபலமான இசையமைப்பாளராக உள்ளார். ஆஸ்கார் விருது வென்றதை அடுத்து, அவருக்கு உலகளவில் புகழ் கிடைத்தது. தற்போது அவர் தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் உலகளவில் பயணம் மேற்கொண்டு அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் அவர் நடத்தி வருகிறார். சென்னையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற பெயரில் அவர் இசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டிருந்தார். 

அதை காணுவதற்கு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்காக டிக்கெட் எடுத்து பலநூறு ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென மறக்குமா நெஞ்சம் கான்செர்ட் கடைசி நிமிடத்தில் ரத்தாகியுள்ளது.


சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால் கான்செர்ட் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேறு வழியில்லாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏ.ஆர். ரஹ்மான் பதிவு செய்துள்ளார். 

Trending News

Latest News

You May Like