ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு வந்த சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம்...

திருவனந்தபுர விமான நிலைய சுங்க அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் இருந்து கடத்தல் தங்கத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சிக்கிய தங்கத்தின் மதிப்பு சுமார் 30 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலமாக அந்தப் பெட்டகமானது திருவனந்தபுர விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது. அதிகாரிகளால் விடுவிக்கப்படுவதற்காக சரக்கு முனையத்தில் காத்திருப்பில் இருந்துள்ளது.
விசாரணையில் அந்தப் பெட்டகமானது துபாயில் இருந்து வந்துள்ளது என்பதும், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு அனுப்பட்டுள்ளது என்பதும் சுங்க அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக கருத்துத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து வரும் வேளையில், அதை அனுப்பியவர் யார் என்பது குறித்து விசாரணை தொடர்வதாகத் தெரிகிறது.
Newstm.in