கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல்! யூஏஇ சுகாதார துறை!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் பலதரப்பட்ட தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது பரிசோதனைகள் பாதுகாப்பான முடிவுகளை அளித்திருப்பதாகவும், நல்ல விளைவுகளை கொடுப்பதாகவும் உள்ளது எனவும் சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. பக்க விளைவுகள் ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது அதனால் பாதுகாப்பானதே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in