1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்..! நாம் தமிழர் மற்றும் விசிக கட்சிக்கு அடித்த ஜாக்பாட்..!

1

பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்தது. மொத்தத்தில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. 

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதே போல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. 2019-ம் ஆண்டு ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Trending News

Latest News

You May Like