1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை என்னாச்சு ? சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி !

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை என்னாச்சு ? சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி !


ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா? என மத்திய சமூக நீதித்துறை அமைச்சருக்கு சிபிஎம் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்பி., வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஒவ்வொரு பொது மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினர்க்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது. அதுதான் பல கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.

அதில் பொதுப் பிரிவினர்க்கான கட் ஆஃப் 62 எனவும், ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆஃப் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினர் கட் ஆஃப் 59.5 ஆகும். அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆஃப் குறைவாக அதாவது 57.75 ஆக உள்ளது. இந்த கட் ஆஃப் விவரங்கள் சமுக யதாரத்தங்களோடு பொருந்துவதாக இல்லை. இதனால், இடஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எல்லோரின் கட் ஆஃப் விவரங்களும் தேர்வு பெற்றோர் பட்டியலோடு வெளியிடப்படவில்லை. இதனால், இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது. தனியர்களுக்கே அவரவர் கட் ஆஃப் விவரங்கள் அனுப்பப்பி வைக்கப்படுகின்றன.

இந்த தேர்வுகள் ஐ.பி.பி.எஸ் (IBPS) என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்பட்டு வங்கிகளுக்கு தேர்வு பெற்றோர் பட்டியல் வழங்கப்படுகிறது. அந்த அமைப்பும் ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.
அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்? .

ஏன் தேர்வு பெற்றொர் பட்டியல் முழுமையாக ஒவ்வொரு தனியரின் கட் ஆஃப் மதிப்பெண்களோடும், அவர்கள் சார்ந்துள்ள பிரிவு விவரங்களோடும் பொதுவில் வெளியிடக்கூடாது? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகள் தேவைப்படுகின்றன. எனவே, இட ஒதுக்கீடு அமலாக்கம் பற்றி வெளிப்படையான அணுகுமுறையும், சமூகத் தணிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like