1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பிங்க.. இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் : கலெக்டர் அறிவிப்பு!

1

தமிழக அரசு, கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு, அவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக பிரத்யேக சாப்ட்வேர் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போன் அரசு சார்பில் வழங்கப்படும்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தென் சென்னை எல்லைக்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது.

1.செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80% 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

2. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

3. 18 வயது பூர்த்தி அடைந்த பட்டயப் படிப்பு /polytechnic ITI பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது.

5. அதிகபட்ச வயது வரம்பு 70.

தென் சென்னையை சார்ந்த மேற்காணும் தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like