1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! சத்துணவு மையத்தில் வேலை; 10-ம் வகுப்பு தகுதி போதும்..!

1

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது மாவட்ட வாரியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

மாவட்டங்கள் காலிப்பணியிடங்கள்
பெரம்பலூர் 73
ராமநாதபுரம் 187
சேலம் 722
தென்காசி 138
தேனி 106
தூத்துக்குடி 104
திருவள்ளூர் 236
விழுப்புரம் 288
விருதுநகர் 273
கடலூர் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை
ஈரோடு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை
கரூர் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை
தஞ்சாவூர் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை

3,000 அதிகமான பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வயது வரம்பு

  • இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பொதுப் பிரிவினர் மற்றும் எஸ்சி பிரிவினர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.
  • எஸ்டி (பழங்குடியினர்) 18 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.
  • கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள் 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி
சமையல் உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.3,000 வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை-1) ரூ.3,000 முதல் ரூ.9,000 வழங்கப்படும்.

நிபந்தனைகள்

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நியமனம் கோரும் சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீக்குள் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.
  • கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதியின் அடிப்படையில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். எனவே, நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு https://dharmapuri.nic.in/ என்ற தர்மபுரி மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன்

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • இருப்பிட சான்று
  • ஆதார் அட்டை
  • வகுப்புப் பிரிவு சான்று
  • கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டரோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ்
  • மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (இருப்பின்)

இணைத்து விண்ணப்பிக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மாவட்டத்திற்கு ஏற்ப மாறுப்படும். அதிகபடியாக ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என கருதப்படுகிறது. தபால் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதம் ஆகினால் நிர்வாகம் பொறுப்பேற்காது.

Trending News

Latest News

You May Like