உடனே விண்ணப்பீங்க..! வட்டியே இல்லாமல் கல்வி கடன் தரும் வித்யாலட்சுமி திட்டம்..!
தேசிய கல்வி கொள்மையின் ஒரு பகுதியாக பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு பிணையமில்லாத, உத்தரவாதமில்லாத கடன் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கல்வி கடன் பெற தகுதியானவர்கள் யார்?
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF Ranking)மூலம் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் (QHEIs) என்று பட்டியலிடப்பட்ட 860 உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற தகுதியானவர்கள் ஆவார்கள். இதில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவங்களும் இடம்பெறும். தகுதியான மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முதல் கல்வியை தொடர தேவையான செலவுகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் கல்வி கடனாக ரு.7.5 லட்சம் வரை மாணவர்களுக்கு வழங்கப்படும். தொழில்நுப்டம் மற்றும் தொழில்முறை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த திட்டம் மூலம் உயர் கல்வியில் சேரும் சுமார் 22 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் பலன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கல்வி கடன் மட்டுமின்றி வட்டியில் மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இணையவழியில் விண்ணப்பம் :
எளிய, வெளிப்படையான முறையில் மாணவர்களுக்கு ஏற்ற எளி நடைமுறையில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உயர் கல்வித் துறையின் பிரதமரின் வித்யாலட்சமி திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இணையதளம் மூலம் கடன் உதவிக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் பட்டியலில் உள்ள கல்லூரிகளில் உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் எளிமையான முறையில் கல்வி கடனை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கல்லூரிகளும் இதில் அடங்கும் என்பதால் குறைவான குடும்ப வருமானம் கொண்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையவார்கள் என்று கருதப்படுகிறது.