உடனே விண்ணப்பீங்க..! திருவண்ணாமலை கோவிலில் 109 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.இக்கோவிலில் 18 பிரிவுகளில் 109 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டிருந்தது. குறிப்பாக இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தட்டச்சர்
தட்டச்சர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1 கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 18,500 முதல் 58,600 வரை.
காவலர் பணி
காவலர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 70. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.
கூர்க்கா
கூர்க்கா பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.
ஏவலாள்
ஏவலாள் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வைர.
உபகோயில் பெருக்குபவர்
உபகோயில் பெருக்குபவர் காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வரை.
கால்நடை பராமரிப்பாளர்
கால்நடை பராமரிப்பாளர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வரை.
உபகோயில் காவலர்
உபகோயில் காவலர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வரை.
திருமஞ்சனம்
திருமஞ்சனம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 3. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வைர.
முறை ஸ்தானீகம்
முறை ஸ்தானீகம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 10. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வரை.
ஓடல்
ஓடல் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.
தாளம்
தாளம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 3. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,500 முதல் 58,600 வரை.
தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு)
தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு) பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 20,600 முதல் 65,500 வரை.
பிளம்பர்
பிளம்பர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 4. கல்வித் தகுதி பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 18,000 முதல் 56,900 வரை.
உதவி மின்பணியாளர்
உதவி மின்பணியாளர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 16,600 முதல் 52,400 வரை.
தலைமை ஆசிரியர்
தலைமை ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதியாக தமிழில் முதுகலைப் பட்டமும் ஆசிரியர் பயிற்சி இளநிலை பட்டமும் படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ. 36,700 முதல் 1,16,200 வரை.
தேவார ஆசிரியர்
தேவார ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,12,400 வரை.
சங்கீத இசை ஆசிரியர்
சங்கீத இசை ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதியாக குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 35,400 முதல் 1,12,400 வரை.
ஆகம ஆசிரியர்
ஆகம ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி வேத, ஆகம சாலையில் நான்கு ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ. 35,900 முதல் 1,13,500 வரை.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வு செய்யப்படும் முறையாக இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டை, அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது பணியின் வரிசை எண் மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்:
பிப்ரவரி 28
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601
.