1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாடு அரசு துறைகள் காலியாகவுள்ள 118 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு..!

1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு துறைகளில் உள்ள 118 காலிப்பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி மற்றும் காலிபணியிடங்கள் விவரம்:

பதவி: கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர்- அரசு சட்டக் கல்லூரிகள். காலியிடங்கள்: 12

மேலாளர் தரம்-III(சட்டம்). காலியிடங்கள்: 2

முதுநிலை மேலாளர் (சட்டம்). காலியிடங்கள்: 9

உதவி மேலாளர்(சட்டம்). காலியிடங்கள்: 14

உதவி மேலாளர்(சட்டம்). காலியிடங்கள்: 2

தமிழ் செய்தியாளர். காலியிடங்கள்: 5

ஆங்கில செய்தியாளர். காலியிடங்கள்: 5

கணக்கு அலுவலர் நிலை-III. காலியிடங்கள்: 1

கணக்கு அலுவலர். காலியிடங்கள்: 3

உதவி மேலாளர்(கணக்கு). காலியிடங்கள்: 20

துணை மேலாளர்(கணக்கு). காலியிடங்கள்: 1

உதவி பொது மேலாளர் (நிதி).

காலியிடங்கள்: 1

உதவி பொது மேலாளர்.

காலியிடங்கள்: 1

வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்). காலியிடங்கள்: 6

உதவி இயக்குநர்(புள்ளியியல்). காலியிடங்கள்: 17

உதவி இயக்குநர்(சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை). காலியிடங்கள்: 3

முதுநிலை உதவி இயக்குநர்(கொதிகலன்கள்).

காலியிடங்கள்: 4

நிதியாளர். காலியிடங்கள்: 6

உதவி இயக்குநர்(னகர் மற்றும் ஊரமைப்பு). காலியிடங்கள்: 4

உதவி மேலாளர்(திட்டம்). காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

குறிப்பு: செய்தியாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் எழுத்துத் தேர்வு 2 தாள்களை கொண்டது எனவும் அறிவிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்விற்கு ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

கடைசி நாள்: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 14.6.2024

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் தேர்வு செய்யப்படும் முறை :

  • இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர் (அரசு சட்டக் கல்லூரிகள்) பதவிக்கு மட்டும் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்
  • இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 2 தாள்களாக நடத்தப்படும். முதல் தாள் அனைத்து பதவிக்களுக்கும் ஒன்று. இரண்டாம் தாள் பதவிக்கு ஏற்று மாறுப்படும்.
  • விண்ணப்பதார்களில் தகவல்களின் அடிப்படையில் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்து தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

டிஎன்பிஎஸ்சி தொழில் நுட்ப பணிகள் முக்கிய நாட்கள் :

விவரம் முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 14.06.2024
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கால அளவு 19.06.2024 - 21.062024
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்- தாள் 1 28.07.2024
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் - தாள் 2 12.08.2024 - 16.08.2024
நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கபப்டும்

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் முறையில் தகுந்த தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like