1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! ரெப்கோ வங்கியில் Clerk வேலைவாய்ப்பு..!

1

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் (Clerk)/Customer Service Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

காலிப்பணியிடங்கள்

  • Customer Service Associate/ கிளார்க் (Clerk) – 30 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி

ரெப்கோ வங்கி கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

கிளார்க் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480/- வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு 

ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 28 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு

பிரிவு வயது தளர்வு
SC/ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS) 10 ஆண்டுகள்
PwBD (SC/ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்

தேர்வு செயல்முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC/முன்னாள் இராணுவத்தினர்/PWD விண்ணப்பதாரர்கள்: ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.900/-
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.09.2025

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.repcobank.com என்ற இணையதளத்திற்குச் சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களுடன், 18.08.2025 முதல் 08.09.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like