உடனே விண்ணப்பீங்க..! ரயில்வேயில் 1,376 பேருக்கு வேலை ரெடி!
ஆக.,17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 16ம் தேதி.
ரயில்வேயில் செவிலியர் கண்காணிப்பாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட 1,376 பாரா மெடிக்கல் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடங்கள்- வயது வரம்பு- மொத்த எண்ணிக்கை
* செவிலியர் கண்காணிப்பாளர்- 22 வயது முதல் 33 வயது வரை- 713.
* உணவியல் நிபுணர்- 18 வயது முதல் 36 வயது வரை- 05.
* ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் (Audiologist & Speech Therapist)- 21 வயது முதல் 33 வயது வரை- 04.
* மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist)- 18 வயது முதல் 36 வயது வரை- 07.
* பல் மருத்துவர்- 18 வயது முதல் 36 வயது வரை- 03.
* டயாலிசிஸ் டெக்னீஷியன்- 20 வயது முதல் 36 வயது வரை- 20.
* உடல்நலம் மற்றும் மலேரியா ஆய்வாளர்- 18 வயது முதல் 36 வயது வரை- 126.
* ஆய்வாக கண்காணிப்பாளர்- 18 வயது முதல் 36 வயது வரை- 27.
* பெர்ப்யூஷனிஸ்ட் (Perfusionist) – 21 வயது முதல் 43 வயது வரை- 02.
* பிசியோதெரபிஸ்ட்- 18 வயது முதல் 36 வயது வரை- 20.
* தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist)- 18 வயது முதல் 36 வயது வரை- 02.
* கேத் லேப் டெக்னீஷியன் (Cath Lab Technician) – 18 வயது முதல் 36 வயது வரை- 02.
* மருந்தாளர்- 20 வயது முதல் 38 வயது வரை- 246.
* ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன் (Radiographer X-Ray Technician)- 19 வயது முதல் 36 வயது வரை- 64.
* ஸ்பீச் தெரபிஸ்ட் ( Speech Therapist) – 18 வயது முதல் 36 வயது வரை- 01.
* கார்டியாக் டெக்னீஷியன்- 18 வயது முதல் 36 வயது வரை- 04.
* ஆப்டோமெட்ரிஸ்ட் (Optometrist)- 18 வயது முதல் 36 வயது வரை- 04.
* இ.சி.ஜி. டெக்னீஷியன்-18 வயது முதல் 36 வயது வரை- 13.
*ஆய்வக உதவியாளர்-18 வயது முதல் 36 வயது வரை- 94.
* களப்பணியாளர்- 18 வயது முதல் 33 வயது வரை- 19.
கல்வி தகுதி என்ன?
* வேதியியல் பாடத்துடன் அறிவியலில் இளங்கலை பட்டம் (பி.எஸ்.சி.) மற்றும் தொடர்புடைய துறையில் ஒரு வருட டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
* பார்மசியில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பெற்றுள்ளதோடு, இடைநிலைத் தேர்வை முடித்திருக்க வேண்டும்.
* செவிலியர் தொடர்புடைய பணியிடங்களுக்கு, பி.எஸ்சி.செவிலியர் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி., ஆகியோர்களுக்கு ரூ.250 கட்டணம்.