உடனே விண்ணப்பீங்க..! தேர்வு இல்லை! இந்திய அஞ்சல் துறையில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) என்று அழைக்கபடும் இந்திய அஞ்சல் துறை வங்கியில் காலியாக உள்ள 51 Circle Based Executive (CBE) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்
கல்வித் தகுதி
இந்திய அஞ்சல் துறை வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்திய அஞ்சல் துறை வங்கி பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது. அதன்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரங்கள்
இந்திய அஞ்சல் துறை வங்கி பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
இந்திய அஞ்சல் துறையில் வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- டிகிரி மதிப்பெண்கள் அடிப்படையில் ( Shortlisting )
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
IPPB Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWD (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்) – ரூ.150
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 750/-
- கட்டண முறை: ஆன்லைன்