1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! ஆகாஷ்வாணியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

1

பிரசார் பாரதியில் கீழ் ஆகாஷ்வாணியின் செய்திப்பிரிவில் உள்ள பல்வேறு பதவிகள் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளது. தலைநகர் டெல்லி மொத்தம் 107 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
உதவி AV எடிட்டர் 15
காப்பி எடிட்டர் 18
காப்பி எடிட்டர் (இந்தி) 13
எடிட்டோரியல் நிர்வாகிகள் (ஆங்கிலம்) 5
எடிட்டோரியல் நிர்வாகிகள் (இந்தி) 3
விருந்தினர் ஒருங்கிணைப்பாளர் 2
செய்தி வாசிப்பாளர் (ஆங்கிலம்) 11
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (இந்தி) 14
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (சமஸ்கிருதம்) 3
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (உருது) 8
செய்தியாளர் (வணிகம்) 2
செய்தியாளர் (ஆங்கிலம்) 8
செய்தியாளர் (சட்டம்) 3
செய்தியாளர் (விளையாட்டு) 2
மொத்தம் 107
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆகஸ்ட் 20-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் பிரிவிற்கு மட்டும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி
  • உதவி AV எடிட்டர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்/ ஒலி/வீடியோ எடிட்டிங்கில் டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  • காப்பி எடிட்டர் பதவிக்கு இதழியியலில், மக்கள் தொடர்பியலில் பட்டப்படிப்பு/ பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம்/ இந்தி திறன், கணினி திறன், தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 2 வருடம் அனுபவம் தேவை.
  • எடிட்டோரியல் நிர்வாகிகள் பதவிக்கு பட்டப்படிப்பு/ இதழியலில் பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2 வருடம் அனுபவம் தேவை.
  • விருந்தினர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பட்டப்படிப்பு/ இதழியியல் டிகிரி அல்லது பிஜி டிப்ளமோ தேவை. 2 வருடம் அனுபவம் வேண்டும்.
  • செய்தி வாசிப்பாளர் பதவிக்கு பட்டப்படிப்பு/ இதழியல் அல்லது மக்கள் தொடர்பியலில் டிகிரி/ பிஜி டிப்ளமோ தேவை. 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
  • செய்தியாளர் பதவிக்கு பட்டப்படிப்பு/ இதழியலில் டிகிரி, மக்கள் தொடர்பியலில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தி, ஆங்கிலம் தேவை. 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பள விவரம்
  • உதவி AV எடிட்டர் பதவிக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.
  • காப்பி எடிட்டர், எடிட்டோரியல் நிர்வாகிகள், விருந்தினர் ஒருங்கிணைப்பாளர், செய்தி வாசிப்பாளர் பதவிகளுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
  • செய்தியாளர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
பிரசார் பாரதியில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை
செய்தித்துறையில் உள்ள பணி வாய்ப்பிற்கு ஆர்வமுள்ளவர்கள் https://prasarbharati.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி https://avedan.prasarbharati.org/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 20.08.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 03.09.2025

ஆகாஷ்வாணி செய்திப்பிரிவிற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் தங்களின் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like