1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் 500 காலியிடங்கள்..!

1

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு நிறுவனம் ஆகும். இங்கு, உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 500.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 

முக்கியமான தேதிகள்

விண்ணப்பதாரர்கள் இன்று  (அக்., 24) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 

ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்களுக்கு ஐந்தாண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ.850. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
 

தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
 

விண்ணப்பிப்பது எப்படி?

https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like