1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பீங்க..! கடலோர காவல் படையில் 320 காலிப்பணியிடங்கள்...! +2 தேர்ச்சி போதும்..!

1

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடலோர காவல்படையில் காலியாகவுள்ள நேவிக் மற்றும் யான்ட்ரிக் பதவிக்கான 320 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ndian Coast Guard பணியின் விவரங்கள் :

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
நேவிக் (General Duty) 260
யான்ட்ரிக் (Mechanical) 33
யான்ட்ரிக் (Electrical) 18
யான்ட்ரிக் (Electronics) 9
மொத்தம் 320
Indian Coast Guard பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் :
  • கடலோர காவல்படையின் நேவிக் மற்றும் யான்ட்ரிக் பணியிடங்களுக்கு 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 22 வயதிற்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை உள்ளது.
  • நேவிக் பதவிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.21,700 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும்.
  • யான்ட்ரிக் பதவிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.29,200 வழங்கப்படும். கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படும்.
Indian Coast Guard பணிக்கான கல்வித்தகுதி :
  • நேவிக் பதவிக்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • யான்ட்ரிக் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எலெக்ட்ரிக்/மெக்கானிக்கல்/எலெக்ட்ரானிக்கஸ்/தகவல் தொடர்பியல் ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Indian Coast Guard பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் 3 நிலைப்படி தேர்வு செய்யப்படுவர். முதல் நிலையில், கணினி வழி எழுத்து தேர்வு, இரண்டாம் நிலையில், உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். மூன்றாம் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இறுதி மருத்துவ பரிசோதனை நடைபெறும். இறுதியாக தகுதிவாய்ந்தவர்களில் பட்டியல் வெளியிடப்படும்.

Indian Coast Guard பணிக்கு விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like