1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பிங்க..! அரசுப் பள்ளியில் வேலை வாய்ப்பு.. லட்சத்தில் சம்பளம்..!

1

ஒன்றிய அரசின் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளியில் முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அக்கவுண்டென்ட், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் என மொத்தம் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பதவியின் பெயர்: முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அக்கவுண்டன்ட், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டன்ட்.

காலியிடங்கள்: 4,062 

முதல்வர் பணிக்கு 303 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teachers or PGTs) பணிக்கு 2,266 பேர், அக்கவுண்டன்ட்(Accountant) பணிக்கு 361 பேர், ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) பணிக்கு 759 பேர், லேப் அட்டென்டன்ட் (Lab Attendant) பணிக்கு 373 பேர் என மொத்தம் 4,062 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: 

முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

jobs

ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

முதல்வர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்டிங், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு.

சம்பளம்: 

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி முதல்வர் பணிக்கு ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

அக்கவுண்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும், ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

application

விண்ணப்ப கட்டணம்: 

முதல்வர் பணிக்கு ரூ. 2,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ. 1,500, பிற பணிகளுக்கு ரூ. 1,000 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி:

குதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் emrs.tribal.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் சீட் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டங்கள் emrs.tribal.gov.in இணையதளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like