1. Home
  2. தமிழ்நாடு

உடனே விண்ணப்பியுங்க..! மத்திய அரசு துறையில் 250 காலி பணியிடங்கள்..!

1

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கள உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 250 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: கள உதவியாளர் (Field Assistant)

காலி பணியிடங்கள்: 250

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

BECIL

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ. 22,744

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://becilregistration.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

application

விண்ணப்ப கட்டணம்:

பொது/ஓபிசி/முன்னாள் ராணுவ வீரர்/பெண்கள் விண்ணப்பதாரர்கள் - ரூ.885
எஸ்சி/எஸ்டி/EWS/உடல் ஊனமுற்றவர்கள் - ரூ. 531

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2023

Trending News

Latest News

You May Like