1. Home
  2. தமிழ்நாடு

நாளை முதல் சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Q

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர வரும் 4ஆம் தேதி முதல் இணையதளம் முலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை “www.tnhealth.tn.gov.in” என்ற சுகாதாரத் துறையின் இணைதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தபால் / கூரியர் சேவை வாயிலாகவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் இளநிலை நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like