1. Home
  2. தமிழ்நாடு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் !

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் !

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை www.tngasapg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் !

பதிவுக்கட்டணம் ரூ.2, விண்ணப்பக்கட்டணம் ரூ.58 சேர்த்து ரூ.60 செலுத்த வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்டியலின விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை அக்டோபர் 15 முதல் அக்டோபர் 20 வரை அட்டவணைப்படி பதிவேற்றலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் !

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், சந்தேகம் இருந்தால் மாணவர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக care@tngasapg.org மற்றும் tndceoffice@gmail.com என்ற email முகவரி மூலமாகவும் மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like