தமிழக வெற்றி கழகம் சார்பில் விண்ணப்பம்..! தவெக தேர்தல் சின்னம் இதுதானா..?

தமிழக வெற்றி கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்து வருகிறார். தொடர்ந்து மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த முடிவு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஈடுபட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் வழங்கப்பட்ட சின்னங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொருத்தமான சின்னம் எது என அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மக்களிடையே கேள்வி எழுந்திருந்தது. அது தொடர்பான செய்தி தற்பொழுது வெளியாகி உள்ளது.தமிழக வெற்றி கழகத்தின் சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்துள்ளது தற்பொழுது தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் விருப்பமாக ஆட்டோ சின்னம் தெருவாகி உள்ளது வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து தேர்தல் ஆணையத்தில் மூன்று சின்னங்களை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தில் புதியதாக வந்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை பெற்று போட்டியிட உள்ளதாகவும் இதற்காக நவம்பர் மாதத்தில் தேர்தல் கமிஷனரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதில் விருப்பச் சின்னத்தை குறிப்பிட வேண்டும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆட்டோ நட்சத்திரம் அகழ்விளக்கு உள்ளிட்ட மூன்று சின்னங்களை தேர்வு செய்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் விருப்பச் சின்னமாக ஆட்டோவை ஒதுக்க தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் மக்கள் சேவை என்ற கட்சியை தொடங்கியிருந்தார். மேலும் ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் ஆணையத்தினால் பதிவு செய்யப்பட்ட அந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது மேலும் நடிகர் ரஜினியின் உடல்நிலை மற்றும் கால சூழ்நிலை காரணமாக ரஜினிகாந்த் அந்த கட்சியை தொடங்காமல் அரசியலில் இருந்து ஒதுங்கினார் இந்த சூழலில் தான் ஆட்டோ சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் பெற விருப்பம் தெரிவித்துள்ளது முன்னதாகநடிகர் விஜய்வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக வருவார்.
அதுமட்டுமின்றி ஒரு சில தமிழ் படங்களில் ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார் இது விஜய்க்கு சென்டிமென்ட் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன தொடர்ந்து தீவிர அரசியல் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றன.