#BREAKING : 'அப்பா' செயலி வெளியீடு..!

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதனுடன், அவர் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இந்த நிலையில் வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக திருப்பெயர் கிராமத்தில் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழாவில், ‘அப்பா’ என்ற புதிய செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியவை:*
▪️ அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம்!
▪️ பிள்ளைகள் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை, அரசுக்கும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது
▪️ அன்னை, தந்தை, ஆசிரியர்கள் இங்கு மொத்தமாக கூடியுள்ளது யாரும் காணாத காட்சி
▪️ ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து என்ற அடிப்படையில் கவனித்து அவர்களை வளர்த்து வருகிறோம்.