1. Home
  2. தமிழ்நாடு

உறுப்பினர் சேர்க்கைக்காக செயலி அறிமுகம்.. முதல் உறுப்பினராக இணைகிறார் விஜய்..!

Q

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த நிலையில், உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
விஜய் தலைமையில் இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம், இன்று மாலை பனையூரில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் த.வெ. கட்சியின் தலைவர் விஜய், முதல் உறுப்பினராக கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் நோக்கத்தில் கட்சிக்கு உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இன்றைய தினம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்கக் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை கடந்த 57 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளுக்கு அடுத்து, இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க த.வெ.க. முடிவு செய்திருப்பது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News

Latest News

You May Like