வளைய சூரிய கிரகணம் அன்று பயங்கர சத்தத்துடன் பூஜை நடத்திய அகோரியால் பரபரப்பு..
திருச்சியை சேர்ந்த ராஜகோபாலும் மேரியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவர்கள். இவர்களின் மகன் தான் மணிகண்டன். இப்போது 40 வயதாகிறது. மணிகண்டன் சின்ன வயசிலேயே காசிக்கு போய் அகோரியாக மாறிவிட்டார்.
அதனால் எப்பவுமே அவர் உடம்பு பூராவும் திருநீறுதான் பூசியிருப்பார். திடீர் திடீரென்று நடுராத்திரி உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டு பூஜை செய்வார். அப்படியே எழுந்து சுடுகாட்டுக்கு போய்விடுவார்.
அங்கே எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை சாப்பிடுவார். இவர் மட்டுமல்ல... பெரும்பாலான அகோரிகள் எல்லாருமே இப்படித்தான் செய்வார்கள். திருச்சி உய்யகொண்டான் ஆற்றங்கரையில் ஜெய் அகோர காளி கோயில் ஒன்று உள்ளது. இதை மணிகண்டன் தான் கவனித்து வருகிறார்.
அமாவாசை, பவுர்ணமி நேரங்களில் மணிகண்டன் பூஜைகளை நிறைய நடத்துவார். 2 வருடத்துக்கு முன்பு மணிகண்டன் அம்மா மேரி இறந்து விட்டார். அப்போது சடலத்தின் மீது உட்கார்ந்து பூஜை செய்து தமிழகத்துக்கே பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், நேற்று 10 வருஷத்துக்கு ஒரு முறை நடைபெற்ற அரிய வளைய சூரிய கிரகணம் நடந்து முடிந்தது.. இதற்காக மணிகண்டன் சிறப்பு பூஜை செய்தார்.. தன்னுடைய ஜெய் அகோர காளியம்மன் கோவிலில் சக கோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு, ஓம் என்று வரையபட்ட கோலத்தில் அமர்ந்து.
தீபங்கள் ஏற்றி தனது சிஷ்யர்களுடன் தலையில் அக்னிசட்டி வைத்து பூஜை நடத்தினார். அப்போது அகோரிகள் வழக்கம்போல் தலைகீழாக நின்று மந்திரங்களை ஓதினர்.. மேலும் டம்ரா மேளங்கள் சத்தமாக அடிக்கப்பட்டன.
அந்த சத்தத்தின் நடுவே அகோரிகளின் பூஜைகள் நடந்தன. கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் அவ்வளவாக இதில் பங்கேற்கவில்லை.. அதேசமயம், அகோரிகள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட இந்த பூஜையானது விசித்திரமான ஒன்றாகவும் இருந்தது.
Newstm.in