1. Home
  2. தமிழ்நாடு

அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

1

சென்னை அடுத்த மேடவாக்கம் பெரியார் நகரில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

யதா கிரீன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் பொன் விதை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி கருப்பையா மற்றும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு 500 பனை விதைகளை நட்டு வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி கருப்பையா, சட்டம்தான் நம்மை காப்பாற்றுவதாகவும், இளைஞர்கள் சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Trending News

Latest News

You May Like