1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் நடிகை அனுஷ்கா திருமணம்?

Q

யோகா டீச்சரான அனுஷ்கா நாகார்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் நடித்த படங்களில் அருந்ததி படம் மெகா ஹிட்டானது. பேய் கதை ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்துப் போனார்கள். இதனால் ஃபேமஸ் ஆக ஆரம்பித்துவிட்டார். சூழல் இப்படி இருக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது. அதன்படி வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்தார். முக்கியமாக பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அனுஷ்காவின் கரியர் மேற்கொண்டு உச்சம் சென்றது.

அப்படி உச்சத்தில் இருக்கும்போதுதான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையை கூட்டினார். படம் படுதோல்வியடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் தடுமாறினார். இதன் காரணமாக அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போனார். இருந்தாலும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. இதற்கிடையே பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் சேர்ந்து நடித்தார் அனுஷ்கா. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி; இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்களுக்குள்ளான காதலில் பிரபாஸ் தரப்பிலிருந்து சில பிரச்னைகள் வந்ததாகவும்; அதன் காரணமாகத்தான் கடும் மன உளைச்சலாகி சினிமாவில் அனுஷ்காவால் கவனம் செலுத்த முடியவில்லை என்ற பேச்சும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

சூழல் இப்படி இருக்க அனுஷ்கா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸஸ் பொலிஷெட்டி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர்; இப்போது கிரிஷ் இயக்கத்தில் காட்டி படத்தில் நடித்துவருகிறார். இது ஹீரோயினை மையப்படுத்திய படமாக உருவாகிவருகிறது. இது தவிர்த்து மலையாளத்தில் காத்தனார் என்ற படத்திலும் நடித்து மல்லுவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் அனுஷ்கா. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் அனுஷ்காவுக்கு 42 வயது ஆகிறது. ஆனாலும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போது அவரது திருமணம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும்; அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும்; கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள அனுஷ்காவும் ஒத்துக்கொண்டார் என்று தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Trending News

Latest News

You May Like