அனுஷ்காவின் நிசப்தம் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்! இந்த படமாவது சாதிக்குமா?

கொரோனா ஊரடங்கினால், பல துறைகளும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்ததைப் போலவே சினிமா துறையும் பயங்கர பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து என்று திரைப்பட துறை கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்நிலையில், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர்களில் பலர் ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிடி ப்ளாட்பாஃர்மில் ரிலீஸான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், வந்த சுவடே தெரியாமல் ப்ளாப் ஆகிப் போன நிலையில், ஓடிடியில் ரிலீஸான இந்திப் படங்களும் மண்ணைக் கவ்வின.
சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஓடிடியில் ரிலீஸாவது உறுதியான நிலையில், மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in