1. Home
  2. தமிழ்நாடு

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்.2ம் தேதி அனுஷ்கா திரைப்படம் ரிலீஸ் !!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்.2ம் தேதி அனுஷ்கா திரைப்படம் ரிலீஸ் !!


ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் படம் ‘சைலன்ஸ்’. தெலுங்கு பதிப்பிற்கு ‘நிசப்தம்' என பெயரிட்டுள்ளனர்.இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி சாக்ஷி என்ற பேச்சுத்திறன் அற்ற கலைஞராக நடிக்கிறார். மாதவன் ஒரு பிரபல இசைக்கலைஞராக இடம்பெறுகிறார்.

அக்டோபர் 2-ம் தேதி உலகளவில் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. சூரரைப் போற்று, க.பெ. ரணசிங்கம் போன்ற படங்களை தொடர்ந்து இந்த படமும் அமேசான் தளத்தில் வெளியாகிறது.மேலும் படத்தின் புதிய ட்ரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு முக்கியம்சம் என்னவென்றால், இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டது தான். ஏனென்றால் சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் அக்டோபர் 2-ம் தேதியில் தான் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளது. தன் படத்துக்கு போட்டியாக வெளியாகும் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like