சினிமாவை விட்டு வெளியேறினாரா அனுராக் காஷ்யப்..?

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இவர் தமிழில் விடுதலை 2 போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இன்னும் பல படங்களிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அனுராக் காஷ்யப், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் நேரடி இந்தி படமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இவர் பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதாவது பாலிவுட் சினிமாவின் மீதான விரக்தியால் மும்பையில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ள இவர் பாலிவுட் திரையுலகம் டாக்ஸிக்காக மாறிவிட்டதால் தான் அதிலிருந்து விலகுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனுராக் காஷ்யப் மும்பையில் இருந்து வெளியேறி பெங்களூருவில் குடியேறலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.