தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..! 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 31 வயது இளைஞர் கைது..!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அண்மையில் அரங்கேறிய நிலையில் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் சைக்கோ ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுபோல தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருவதால் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தில் சிறுமிகளுடன் 7 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.அந்த இடம் வழக்கமாக விளையாடும் இடம் என கூறபடுகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் என்பவர் அவரது வீட்டிற்கு கடத்திக் கொண்டு சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு 31 வயது உடைய கார் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.அந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார் அதனை தொடர்ந்து கார் ஓட்டுனரை பெற்றோர் தேடிய நிலையில் உறவினர் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் வந்தது.
அந்த தகவலின் பேரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதை கண்டுபிடித்து தரும அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக சிறுமியின் தாய்க்கு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் கார் ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் மேலும் கிராம மக்கள் கார் ஓட்டுநரை தாக்கியதால், கார் ஓட்டுநர் மாரியப்பனுக்கு காயம் ஏற்பட்டது, கார் ஓட்டுனரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி வருகின்றது. இதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகின்றது.