1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..! அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய தூய்மைப் பணியாளர்..!

1

திருத்தணியில் தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும் உள் நோயாளிகளாக 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு இரவு நேரத்தில் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதன் நீட்சியாக, தூய்மை பணியாளராக வேலை பார்ப்பவர்கள் இரவு நேரத்தில் ஆண்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊசி போட்டு, குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுபற்றிய வீடியோவொன்று தற்போது சமூக வலைதளதில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோ, திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like