மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..! சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்..!
கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்னை - திருத்தணி - திருப்பதி இடையேயன தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்கப்பணியில் 20க்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கேயே தங்கி பணிப்புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் , அந்த வழியாக சென்ற சுமார் 17 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் இயற்கைப் உபாதை கழிக்க சென்னை - திருத்தணி - திருப்பதி இடையேயன தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியிடத்தில் உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை கண்ட மேம்பால பணியில் ஈடுப்பட்டு இருந்த வடமாநில இளைஞர் ஒருவர் சிறுமியிடம் சென்ற பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி அலறித்துடித்துள்ளார்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தப்பிக்க முயன்ற வடமாநில இளைஞரை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருவள்ளூர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞரை கைது செய்து காவல்நிலைத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த இக்ரம் ஏக்ரமுல் அலி (வயது 27 ) என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து திருத்தணி காவல்துறை துணைக்காணிப்பாளர் (டிஎஸ்பி) கந்தன் தலைமையில் குழு அமைப்பட்டு 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட இக்ரம் ஏக்ரமுல் அலி மீது ( போக்சோ) பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட ஏக்ரமுல் அலியை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை 25 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் தொடர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு செய்த காவல்துறையினர் 14 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பது தெரியவந்தது.
மேலும் ஆரம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஊழியராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், ராஜு பிஸ்வகர்மா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ராஜு பிஸ்வகர்மாவிடம் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.