1. Home
  2. தமிழ்நாடு

வைரத்தை கண்டுபிடித்த இன்னொரு வைரம்... 5 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளரை பாராட்டிய மேயர் பிரியா..!

1

சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவர் தான் வீட்டில் வைத்திருந்த வைர நெக்லசை தவறவிட்டார்.  அதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். வீட்டிலிருந்த குப்பையுடன் வைர நெக்லஸ் குப்பை தொட்டிக்குள் போய் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.  உடனடியாக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிந்த அந்தோணிசாமியின் உதவியை நாடிய அவர்,  அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டிக்குள் தேடி நெக்லசை தேடினார்.

அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின்  ஓட்டுனரான அந்தோணி சாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தீவிர சோதனை நடத்தி, குப்பைகளின் நடுவே இருந்த வைர நெக்லஸை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார். நகையை பறிகொடுத்தவரின் வேதனையை புரிந்து கொண்டு அவருக்காக தூய்மை பணியாளர் செய்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பான செய்திகள் மற்றும் வீடியோ சமூகவலைதலங்களில் வைரலானது. அத்துடன்  தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். அந்தவகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா குப்பை வாகன ஓட்டுநர் அந்தோணிசாமியை நேரில் அழைத்து, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.  ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உர்பேசர் நிறுவன மண்டலத் தலைவர்  ராதாகிருஷ்ணன், திட்ட மேற்பார்வையாளர்  குருசாமி, சட்டக்குழுத் தலைவர்  சூரிய பிரபா உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Trending News

Latest News

You May Like